14 வயது மாணவியை கடத்தி பாலியல் தொல்லை-காதலன் மற்றும் நண்பன் போக்சோவில் கைது.!!

கோவை பேரூர் பகுதியை சேர்ந்தவர் சேர்ந்தவர் ஷாருக்கான் (வயது19) இவர் கோவையில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் விற்பனை யாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் 14 வயது மாணவி ஒருவரை காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 10ஆம் தேதி பள்ளிக் கூடம் சென்ற அந்த மாணவி வீடு திரும்பவில்லை . இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இது குறித்து பேரூர் அனைத்து மகளீர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர் .போலீசார் மாணவியை தேடிவந்தனர். இதற்கிடையே அந்த மாணவியை ஷாருக்கான் ஊட்டி ,மைசூர், ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இந்த நிலையில் மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் நேற்று நின்று கொண்டிருந் அந்த மாணவியை இன்ஸ்பெக்டர் பர்வீன் பானு தலைமையிலான போலீசார் மீட்டனர் .போலீஸ் விசாரணையில் ஷாருக்கான் அந்த மாணவி ஆசை வார்த்தை கூறி கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இதற்கு அவனின் நண்பன் அருப்புக்கோட்டை சேர்ந்த உசேன் (வயது 20) உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் நேற்று கைது செய்தனர். இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.