கோவையில் மின்சாரம் தாக்கி பைக் மெக்கானிக் பரிதாப பலி..!

கோவையை அடுத்த பீடம்பள்ளியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் .இவரது மகன் முருகவேல் (வயது 39) இவர் பீடம்பள்ளி ஸ்ரீராம் கார்டனில் இருசக்கர வாகன ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார்.இவருக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகிறது ரஞ்சிதா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.நேற்று அவர் தனது ஒர்க்ஷாப்பில் இருசக்கர வாகனத்தை தண்ணீர் அடித்து சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார் .அதே இடத்தில் அவர் இறந்தார்.இதுகுறித்து அவரது மனைவி ரஞ்சிதா சூலூர் போலீசில் புகார் செய்தார் .சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பிரசாத் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.