பொள்ளாச்சி அருகே சட்ட விரோதமாக சேவல் சண்டை நடத்தி சூதாட்டம்- 14 பேர் கைது.!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த கோட்டூர் பக்கம் உள்ள பொங்களியூர் வாய்க்கால் மேடு பகுதியில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவது கோட்டூர் காவல் நிலையத்திற்கு நேற்று மாலை தகவல் வந்தது. ‘சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் குமார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியதாக மலையாண்டிபட்டினம் பிரகாஷ் (வயது 36) சேத்துமடை அபு (வயது 36)
கோட்டூர் கந்த மனோகர்( வயது 28) பில்லி சின்னாம்பாளையம் கனகசபாபதி (வயது 26) பொங்களியூர் கிருஷ்ணகுமார் (வயது 21 சிவராஜ் (வயது 27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 5 சேவல்களும் சூதாட பயன்படுத்தப்பட்ட 700 ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல பொள்ளாச்சி, திம்மக்குத்து பகுதி உள்ள ஒரு தோட்டத்தில் சேவல்சண்டை நடத்தியதாக சூதாடியதாக சாமியாடி புதூர் மணிகண்டன்(வயது 39) ரங்கம் புதூர் பிரபாகரன் (வயது 20) கோவிந்தராஜ் (வயது 55) ஜலத்தூர் பிரிவு திருஞானம் (வயது 26) தப்பட்டை கிழவன் புதூர் சசிகுமார் (வயது35) ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர். 4 சேவல்களும் சூதாட பயன்படுத்தப்பட்ட ரூ 5 ஆயிரமும் பறிமுதல் செய்யப்பட்டது .இதே போது பொள்ளாச்சி திப்பம்பட்டி டாஸ்மாக் பார் அருகே சேவல் சண்டை சூதாடிய மடத்துக்குளம் மோகன்ராஜ் (வயது 33 )திப்பம்பட்டி சுப்பிரமணி (வயது 58) டி.கோட்டம் பட்டி மாதவன் (வயது 22)பொள்ளாச்சி கோவில் வீதி மூர்த்தி (வயது 40 )ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 2 சேவல்கள் பறிமுதல் செய்யப்பட்டது.