மத்தியப் பிரதேதசத்தில் நர்மதை நதியில் பேருந்து கவிழ்ந்து 13 பயணிகள் உயிரிழந்தனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்தியப் பிரதேசதம் இந்தூர் நகரிலிருந்து புனே நகருக்கு பயணிகள் பேருந்து சென்றது. தார் மாவட்டம், கால்காட் பகுதியில் நர்மதை ஆற்றைக் கடக்க பாலத்தில் பேருந்து சென்றது.
அப்போது பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, பாலத்தின் தடுப்புகளை உடைத்துக்கொண்டு ஆற்றில் கவிழ்ந்தது. பேருந்தில் 50 முதல் 60 பயணிகள் வரை இருந்தனர் இதுவரை 15 பயணிகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 13 பேர் பலியானதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து அறிந்தவுடன் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் சம்பவ இடத்துக்கு வந்து, மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
விபத்து குறித்த தகவல் அறிந்தபின், இந்தூர் மண்டல ஆணையர் பவன் குமார் ஷர்மா , கார்கோன் மற்றும் தார் மாவட்ட ஆட்சியர்கள் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று மீட்புப்பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.
Leave a Reply