கடல் வழியாக கடத்த முயன்ற 1055 கிலோ கொக்கையின் போதை பொருள் பறிமுதல் – விரட்டி பிடித்த மெக்சிகோ கடற்படை.!!

மெக்சிகோவில் கடல் வழியாக கடத்த முயன்ற 1055 கிலோ கொக்கைன் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தென் அமெரிக்கா நாடான மெக்சிகோவில் கடல் வழியாக கடத்த போதைப் பொருட்கள் கடத்துவதாக கடந்த 20 மற்றும் 21ஆம் தேதிகளில் போதை பொருள் தடுப்பு பிரிவின் அளித்த தகவலின் பெயரில் ஒக்ஸாக்கா மற்றும் அதன் சுற்றியுள்ள கடற்பகுதியில் மெக்சிகோ கடற்படையினர் சோதனை மேற்கொண்டனர்.

அப்பொழுது வந்த பயணிகள் படகில் கடற்படையினர் சோதனை மேற்கொண்டதில், 1055 கிலோ கொக்கைன் மற்றும் 18 எரிபொருள் கொள்கலன்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அவற்றை கைப்பற்றிய கடற்படையினர், இது தொடர்பாக மூன்று பேரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கடத்தல் குழுக்களை கடற்படையினர் விரட்டிய வீடியோக்களை மெக்சிகோ ராணுவம் வெளியிட்டுள்ளது.