கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 35 ஊராட்சி மன்ற தலைவர்கள் கூண்டோடு பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.
இது பாஜகவினரை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, மறுபுறம் ஆளுங்கட்சியான திமுகவுக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவில் இணைந்துள்ள 35 ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் தனது பரிபூரண வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக அக்கட்சியின் மாநிலத்தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதன் முழு விவரம் பின்வருமாறு:-
திமுக அரசின் அராஜக போக்கால் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் எண்ணம் மற்றும் செயல்கள் மூலம் ஈர்க்கப்படும், நேற்று கமலாலயத்தில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 35 ஊராட்சி மன்றத் தலைவர்கள் உள்ளாட்சி மேம்பாட்டுப் பிரிவு மாநில தலைவர் சோழன் பழனிச்சாமி அவர்கள் முன்னிலையில் தங்களை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துக்கொண்டனர். கடலூர் கிழக்கு மாவட்ட தலைவர் மணிகண்டன் அவர்கள் உடன் இருந்தார், 4-7-2022 அன்று கடலூர் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டிய கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அவர்கள் தீர்மானம் மூலம் நிறைவேற்ற முயன்ற பிரச்சினைகள் அனைத்திற்கும் திமுக அரசின் கீழ் செயல்படும் அரசு எந்திரங்களில் இருக்கும் கோளாறு, ஊழல் மற்றும் முறைகேடுகள் தான் காரணம். மத்திய அரசின் திட்டங்களான பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தைச் செயல்படுத்துவதில் சிக்கல்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ஊராட்சி மன்றங்களுக்கு 2021 2022 ஆம் ஆண்டில் எடுக்கப்பட வேண்டிய நிதி கூட விடுவிக்காததால்.
கடலூரில் அமைந்துள்ள பல ஊராட்சி மன்றங்கள் நிதி நெருக்கடியில் உள்ளன. திமுக அரசு ஊராட்சி மாற்றங்களுக்கு அளிக்கும் நெருக்கடியை எதிர்கொள்ள தமிழக பாஜக பக்கபலமாக இருக்கும், மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் வழியில் ஊழலற்ற நல்லாட்சியை உள்ளாட்சியில் அழித்துவிட பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து இருக்கும் 35 ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் எனது பரிபூரண வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Leave a Reply