கோவை நகைக்கடை அதிபரிடம் 1.30 கோடி தங்கம், பணம் மோசடி-ஏலச்சீட்டு நடத்தியவர் கைது..!

கோவை செல்வபுரம் திருநகர் 2 – வது வீதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 50) நகைக்கடை அதிபர். இவர் செல்வபுரம் அசோக் நகரில் 15 ஆண்டுகளுக்கு மேலாக நகை கடை நடத்தி வருகிறார். இவரும் வைசியாள் வீதியில் தங்கநகை ஏல சீட்டு நடத்தி வரும் மகேஷ் பாபு ( வயது 55) என்பவரும் 30ஆண்டுகளாக நண்பர்களாக பழகி வந்தனர்.இந்த நிலையில் மகேஷ்பாபு மகளுக்கு 2018 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது .அப்போது மகேஷ் பாபு, சிவக்குமாரிடம் ரூ.15 லட்சம் கடன் வாங்கினார். 100க்கு ஒரு ரூபாய் வட்டி செலுத்தி வந்தார். இதையடுத்து அவர் தன்னிடம் தங்க நகை ஏல சீட்டில் சேர்ந்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்று கூறினார் .இது நம்பிய சிவக்குமார் கடந்து 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் 2021 ஆம் ஆண்டு வரை அவரது ஏல சீட்டு கம்பெனியில் தங்கம் கொடுத்து வந்தார். மாதந்தோறும் 80 கிராம், 85கிராம் மீதம் 1,756 கிராம் சொக்கத்தங்கத்தை மகேஷ் பாபுவிடம் கொடுத்தார். அதற்கு லாபத்துடன் 1,900 கிராம் தங்கம் தருவதாக மகேஷ்பாபு கூறினார். ஆனால் 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் அவர் கடனாக பெற்ற ரூ 10 லட்சம் 1,900 கிராம் தங்கம் ஆகியவை சேர்த்து ரூ 1.30 கோடி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார்.இதுகுறித்து பெரிய கடை வீதி காவல் நிலையத்தில் சிவக்குமார் புகார் செய்தார் .போலீசார் நடத்திய விசாரணையில் மகேஷ் பாபு தங்கம் மற்றும் பணத்தை சிவக்குமாரிடம் வாங்கி மோசடி செய்தது தெரியவந்தது .அதை தொடர்ந்து நம்பிக்கை மோசடி ஏமாற்றுதல் ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தங்க நகை ஏல சீட்டு உரிமையாளர் மகேஷ்பாபுவை கைது செய்தனர் . பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.