கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் சாலை விபத்தில் 3 பேர் பலி..

கோவை மாவட்டத்தில் ஒரே நாளில் சாலை விபத்தில் 3 பேர் பலி..  கோவை மாவட்டம் அன்னூர் பக்கம் உள்ள அல்லபாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ். அவரது மகன் கவுரி சங்கர் ( வயது 27) இவர் நேற்று கோவை- அவிநாசி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அரசூரில்உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே சென்றபோது அந்த வழியாக வேகமாக வந்த ஈச்சர் வேன் இவரது பைக் மீது மோதியது. இதில் கவுரிசங்கர் படுகாயம் அடைந்து அதே இடத்தில் இறந்தார் .இது குறித்து அவரது தந்தை செல்வராஜ் சூலூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மாதையன சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக ஒத்தக்கால் மண்டபம் வழுக்குப் பாறையை சேர்ந்த ஈச்சர் வேன்டிரைவர் பாலமுருகன் ( வயது 28 ) கைது செய்யப்பட்டார் மேலும் விசாரணை நடந்து வருகிறது .இதே போல பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள தொட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 43) இவர் நேற்று சாமநாயக்கன்பாளையம்- அத்திப்பாளையம் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ஏதோ ஒரு வாகனம் இவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது .இதில் முருகேசன் படுகாயம் அடைந்துஅதே இடத்தில் இறந்தார் .இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது .போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான வாகனத்தை தேடி வருகிறார்கள். பொள்ளாச்சி- பாலக்காடு ரோட்டில் ஜமீன் முத்தூர் அருகே ரோட்டில் நடந்து சென்ற ஒருவர் மீது சரக்கு ஆட்டோ மோதியது இதில் அவர் படுகாயம் அடைந்தார் .அவருக்கு 65 வயது இருக்கும் .அவரை சிகிச்சைக்காககோவை அரசு மருத்துவமனைக்குஅனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளித்தும் பள்ளிக்காமல் அவர் இறந்தார்.அவர் யார் என்று அடையாளம் தெரியவில்லை. இது குறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார்கேரள மாநிலம் கொடுவாயூரை சேர்ந்த சரக்கு ஆட்டோ டிரைவர் சரக்கு ஆட்டோ டிரைவர் முகம்மத் புனியாஸ் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகிறார்கள்.