டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது ?…

டெல்லி அரசின் மதுபான கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை 3 முறை சமன் அனுப்பியும் அவர் ஆஜராகாத நிலையில் இன்று காலை அமலக்கத்துறை அதிகாரிகள் அவரது வீட்டில் சோதனை வாய்ப்புள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சோதனையின் முடிவில் அவர் கைது செய்யப்படலாம் எனவும் கூறி அம்மாநில அமைச்சர் அதிஷி பரபரப்பை கிளப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் இன்று காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் சோதனை நடத்த இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அவர் கைது செய்ய வாய்ப்பாடு உள்ளது” என பதிவிட்டுள்ளார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சிபிஐ அதிகாரிகள் சுமார் 9 மணி நேரம் அரவிந்த எதிர்பாரிடம் விசாரணை நடத்திய நிலையிலும் அவரை குற்றவாளி என இந்த வழக்கில் சேர்க்கவில்லை.

இந்நிலையில் கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதற்கு அரவிந்த் கெஜ்ரிவால் விளக்கம் அளிக்காத நிலையில் நேற்று 3வது முறையாக அனுப்பப்பட்ட சமனுக்கும் அவர் ஆஜராகவில்லை. அமலாக்கத்துறை அதிகாரிகள் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் சோதனை செய்து அவரை அமலாக்கத்துறை கைது செய்யப்படலாம் என்பதால் அரவிந்த் கெஜ்ரிவால் வீடு அமைந்துள்ள சாலை முழுமையாக மூடப்பட்டுள்ளது. மேலும் ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் முற்றுகையிடுவார்கள் என்பதால் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.