நிஜமான பத்திரிக்கையாளர்கள் இல்லை என்கிற தாக்கம் பொதுமக்களிடையே எழுந்து வருகிறது. செல்போன் வைத்திருப்பவர்கள் எல்லாம் பத்திரிக்கையாளர்களாகவே காட்சியளிக்கின்றனர்.
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மோகம் ஒருபுறம் என்றால், இன்னொருபுறம் யூடியூப் சேனல்களின் அலப்பறைத் தாங்க முடியவில்லை. திரும்புகிற இடங்களில் எல்லாம் பயில்வான்களாகவே இருக்கின்றனர். நடிகைகளின் அந்தரங்கத்தை அலசுகிறேன் பேர்வழி என்று ஆபாச யூ-ட்யூப் சேனல்களும், லைக்ஸ்களுக்காகவும், வியூவ்ஸ்களுக்காகவும் பரபரப்பாக எதையாவது கிளப்பி விடுகிறார்கள்.
ஒரே வாரத்துல 10 கிலோ எடை குறைக்கலாம் என்பதில் துவங்கி, இதைச் சாப்பிட்டா 300 வருஷம் உயிரோட இருக்கலாம் என்று சதுரங்க வேட்டை சம்பவங்களும் யூ-ட்யூப்பில் அரங்கேறுகின்றன. இந்நிலையில், யூ-ட்யூப் சேனல்களை ஒழுங்குபடுத்தவும், முறைப்படுத்தவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த பார்த்திபன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் யூடியூப்பை கட்டுப்படுத்த எந்த நடைமுறையும் இல்லை என்று மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், குற்ற வழக்குகளில் ஊடக விசாரணை நடத்தும் யூடியூப் சேனல்களால் காவல்துறையின் விசாரணை பாதிக்கப்படுகிறது.YouTube சேனல்களில் பதிவுகளை முறைப்படுத்துவது இல்லை. இதனால், பொது அமைதி பாதிக்கப்பட்டுள்ளதால், யூடியூப் சேனல்களை முறைப்படுத்தி, கட்டுப்படுத்த உரிய நடைமுறைகளை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்,” என்றார். இந்த வழக்கு, தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார், நீதிபதி குமரேஷ்பாபு அமர்வில் கடந்த முறை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு வழக்கறிஞர் எட்வின் பிரபாகர், யூடியூப் நிறுவனமும், மத்திய அரசும் எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்படவில்லை.இதையடுத்து, இந்த வழக்கில் மத்திய அரசையும் எதிர் மனுதாரராக சேர்க்க மனுதாரருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதைத்தொடர்ந்து, இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, யூடியூப் சேனல்களை முறைப்படுத்த உரிய நடைமுறைகளை வகுக்கக் கோரிய வழக்கில் 4 வாரத்தில் பதிலளிக்க மத்திய அரசு உத்தரவிட்டது.
Leave a Reply