இந்தியாவின் தங்கத்திற்கான தேவை சரிவு

உலகத் தங்கக் கவுன்சில் வெளியிட்ட ”2026ம் ஆண்டின் 3வது காலாண்டில் தங்கத்தின் தேவை” எனத் தலைப்பிடப்பட்டுள்ள அறிக்கையில், 3ம் காலாண்டில் இந்தியாவின் தங்கம் தேவை 162.5 டன்னாகக் குறைந்துள்ளது.

கடந்தாண்டு இதே காலாண்டில் தங்கத்தின் தேவை 229.8 டன்னாக இருந்தது எனக் குறிப்பிட்டுள்ளது. இருப்பினும், தங்கத்தின் விலை 45% அதிகரித்துள்ளதால், நுகர்வோர் செலவிட்ட மொத்த மதிப்பு கடந்தாண்டு இதே கால கட்டத்தில் ரூ.2.35 லட்சம் கோடியாக இருந்த நிலையில், தற்போது 3% உயர்ந்து ரூ. 2.41 லட்சம் கோடியை எட்டியுள்ளது.

நடப்பு நிதியாண்டின் 3ம் காலாண்டில் தங்கம் இறக்குமதி 46% சரிந்து 114.1 டன்னாக உள்ளது. கடந்தாண்டு இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில் அப்போதைய இறக்குமதி 211.9 டன்னாக இருந்தது. கட்டித் தங்கம் மற்றும் தங்கக் காசுகளின் தேவை கடந்தாண்டில் 91.6 டன்னாக இருந்த நிலையில், தற்போது 40% சரிவடைந்து 55 டன்னாக உள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.