நீ ரொம்ப அழகா இருக்கே… பள்ளி மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்த 65 வயது முதியவர்- 2 ஆண்டு சிறை தண்டனை..!

கோவை போத்தனூரைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி .இவர் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த மாணவி பள்ளிக்கு செல்லும்போது அவரின் பக்கத்து வீட்டை சேர்ந்த முகமது பீர் பாட்ஷா ( வயது 65 )என்ற முதியவர் கடந்த 2020 ஆம் ஆண்டு நீ மிகவும் அழகாக இருக்கிறாய். என்று தினமும் கூறி வந்ததாக தெரிகிறது. திடீரென முகமது பீர்பாட்ஷா அது சிறுமிக்கு ஒரு காதல் கடிதம் கொடுத்தாராம். அத்துடன் சிறுமியை அவர் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது . இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி இதுகுறித்து தனது பெற்றோர்களிடம் கூறினார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் போத்தனூர் போலீசில் புகார் செய்தனர் .புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அமுதா விசாரணை நடத்தி சிறுமிக்கு காதல் கடிதம் கொடுத்து மிரட்டிய முகமது பீர்பாட்ஷா மீது போக்ஸோ சட்டம், மிரட்டல் ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தார். இந்த வழக்கு விசாரணை கோவை போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி குலசேகரன் சிறுமிக்கு காதல் கடிதம் கொடுத்த முதியவர் முகமது பீர்பாட்ஷாவுக்கு மிரட்டல் வழக்கில் ஓரு ஆண்டு சிறையும், ரு .ஆயிரம் அபராதமும் ,போக்சோ வழக்கில் 2 ஆண்டு சிறையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார் அத்துடன் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி குலசேகரன் உத்தரவிட்டார். இதனால் முகமது பீர்பாட்ஷா 2 ஆண்டு சிறைத் தண்டனை அனுபவிக்க கூடும்.