முதல்வர் ஸ்டாலின்: நாட்டிலேயே உயர் கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலம் தமிழ்நாடு …

திருச்சி: இந்தியாவிலேயே உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலம் தமிழ்நாடு. கல்வியில் சிறந்த என்று எந்த பட்டியல் எடுத்தாலும் இதில் தமிழ்நாடு கல்வி நிறுவனங்கள் தான் அதிகமாக இடம்பெற்று இருக்கும் என்று பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் முதல்வர் மு.க ஸ்டாலின் பேசினார். திருச்சி பாரதிதாசன் பலகலைக்கழகத்தில் 38வது பட்டமளிப்பு விழா நடக்கிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி திருச்சி வருகை தந்துள்ளார். பாரதிதாசன் பல்கலைக்கழகம் வந்த பிரதமர் மோடி மாணவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். தொடர்ந்து விழாவில் முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர் என் ரவி உள்பட அமைச்சர்கள் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

விழாவில் முதல்வர் மு.க ஸ்டாலின் பேசியதாவது:- பிரதமர் மோடிக்கு முதலில் நான் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு. திராவிட கொள்கையை தமிழினத்தில் முழங்கிய புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பெயரில் அமைந்துள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். பிரதமர் மோடி இந்த நிகழ்ச்சிக்கு வந்திருப்பதற்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்தியாவிலேயே உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலம் தமிழ்நாடு. கல்வியில் சிறந்த என்று எந்த பட்டியல் எடுத்தாலும் இதில் தமிழ்நாடு கல்வி நிறுவனங்கள் தான் அதிகமாக இடம்பெற்று இருக்கும். நூறாண்டுக்கு முன்பு நீதிக்கட்சி ஆட்சி காலத்தில் கல்விக்காக போடப்பட விதையால் தான் தமிழ்நாடு சிறந்த மாநிலமாக உயர்ந்து நிற்கிறோம். அனைவருக்கும் கல்லூரி கல்வி, அனைவருக்கும் ஆராய்ச்சி கல்வி என்ற இலக்கோடுதான் சமூக நீதி புரட்சியை கல்வித்துறையில் நடத்தி வருகிறது.

இன்னார் தான் படிக்கனும் என்ற நிலையை மாற்றி அனைவருக்கும் அனைத்துவித வாய்ப்புகளையும் உருவக்கி தாறோம். தமிழ்நாட்டு மாணவர்கள் படிப்பிலும் வாழ்க்கையில் வெற்றி பெற நான் முதல்வன் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. உயர்கல்வி மாணவர்களின் சிந்தனைகளுக்கு ஊக்கமளிக்கும் வகையில், சிஎம் ரிசர்ச் கிராட்ன் திட்டம், சிஎம் பாலோசிப் புரோகிராம் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. ஒரு ஆண்டில் 1.40 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு பெற்று தரப்பட்டுள்ளது. பெண் கல்வியை ஊக்கமளிக்கும் பொருட்டு புதுமைப்பெண் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.