ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் நகை பணம் கொள்ளை…

கோவை சாய்பாபா காலனி கே கே புதூர், கணபதி லேஅவுட்டில்ரியல் எஸ்டேட் அதிபர் வசித்து வருகிறார்.இவர் வீட்டை பூட்டி விட்டு கடந்த ஜூன் மாதம் குடும்பத்துடன் அமெரிக்கா சென்று விட்டார்.அவரது வீட்டை சுத்தம் செய்வதற்கு 2 பெண்கள் பணி அமர்த்தப்பட்டு இருந்தனர்.வீட்டில் யாரும் இல்லாத நேரம் யாரோ மாம சாமிகள் வீட்டின்முன் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த 12 கிராம்தங்க நகைகள், ரூ 40 ஆயிரம் பணம் ஆகியவற்றை திருடி சென்று விட்டனர்.இதுகுறித்து அந்த நிறுவனத்தின் மேனேஜர் ஆனந்தகுமார் சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.