திறப்பு விழாவிற்கு முன்பே இரண்டு சர்வதேச விருதுகளை வாங்கிய திருச்சி விமான நிலையம்…

சர்வதேச விருதான அந்த விருதில் ஒன்றுதான் LEAF அவார்ட் அப்படி என்றால் Leading European Architecture Forum என்பது சுருக்கம்தான் அந்த லீஃப். அதுமட்டுமல்ல, இந்த விமானநிலையத்தை வடிவமைத்திருப்பதே இந்திய நிறுவனம் அல்ல. அது லண்டன் நிறுவனம். 1952 இல் தொடங்கப்பட்ட அந்த வடிவமைப்பு நிறுவனம் சர்வதேச அளவில் புகழ் பெற்றது. கிட்டத்தட்ட 1112 கோடி மதிப்பீட்டில் திருச்சி விமானநிலையம் கட்டப்பட்டுள்ளது. அதனை வருகின்ற 2 ஆம் தேதி பிரதமர் மோடி திறந்துவைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார். இதற்கான வேலைகள் தொடங்கிய 3 ஆண்டுகளில் இந்த பிரம்மாண்ட சர்வதேச விமான நிலையம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது பெரிய சாதனை என்றே சொல்கிறார்கள். இது தமிழ்நாட்டில் உள்ள இரண்டாவது சர்வதேச முனையம் ஆகும். திருச்சி விமானநிலையத்தின் நுழைவாயில் கோயில் கோபுரம் போன்று உருவாக்கப்பட்டுள்ளது தனிச் சிறப்பு. இதில் ஒரே சமயத்தில் 750 கார்கள், 250 டாக்சிகள், 10 பேருந்துகளை நிறுத்தி வைக்கும் அளவுக்கு வசதிகள் செய்யப் பட்டுள்ளன. அது மட்டுமல்லாமல் ஒரு சமயத்தில் 2,900 பயணிகள் வரை பயன்படுத்தும் வகையில் இந்த விமானநிலையமானது கட்டப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 75 ஆயிரம் சதுர மீட்டரில் இந்தச் சர்வதேச முனையம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மூன்று மெகாவாட் மின்சார உற்பத்தியைச் சூரிய ஒளி மூலம் தயாரிக்கப்படுகிறது. அதற்காக சோலார் பேனல்கள் கூரை மீதாக பொருத்தப்பட்டுள்ளன. இது ஒரு க்ரீன் ஏர்போர்ட். இதற்கு நான்கு நட்சத்திர அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாகவே 10 நாடுகளுக்குத் திருச்சியிலிருந்து நேரடியாகப் பயணிக்க முடியும். திருச்சி விமானநிலைய ஆய்வாளர் உபயத்துல்லாஹ், இந்தியாவில் இரண்டாம் நிலை நகரங்களில் இருக்கக் கூடிய விமானநிலையமானது எப்படி இருக்க வேண்டும் என்பதற்குத் திருச்சி விமானநிலையம் ஒரு சிறந்த உதாரணம். எதிர்காலத்தில் தொழில்நுட்பங்கள் வளரும் போது பயணிகள் எண்ணிக்கையானது அதிகரிக்கும். ஆகவே அப்படி அதிகரிக்கும்போது அதைச் சமாளிக்க வேண்டும். அந்தளவுக்கான ஒரு விமானநிலையத்தை அட்வான்ஸ் தொழில்நுட்பத்துடன் வடிவமைக்க வேண்டும். அதை உட்கட்டமைப்பு, ஆர்க்கிடெக்ச்சர் அனைத்தும் உலகத்தரத்துடன் உருவாக்க வேண்டும். அப்படி ஏர்போர்ட் அதாரெட்டி ஆஃப் இந்தியா இந்தத் திருச்சி விமானநிலையத்தை உருவாக்கித் தந்துள்ளது. இங்குள்ள ரன்வேயில் எந்த ஒரு பகுதியையும் 360 டிகிரி கோணத்தில் கண்காணிக்க முடியும். அப்படி உருவாக்கி உள்ளனர் இந்த விமானநிலையம் திறப்பதற்கு முன்பாகவே கட்டமைப்புக்காக 2 விருதுகளைப் பெற்றுள்ளது. pascall+watson architects என்ற கட்டுமான டிசைன் கம்பெனி லண்டனை மையமாகக் கொண்ட நிறுவனமாகும். அதுதான் திருச்சி விமான நிலையத்தைக் கட்டி உள்ளனர். இந்த விமான நிலையமானது இலை வடிவில் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் லண்டனை மையமாகக் கொண்டிருந்தாலும், திருச்சி என்பதால், நமது பண்பாட்டைப் பிரதிபலிக்கும் விதமாக வடிவமைப்பில் முக்கியத்துவம் அளித்துள்ளனர். இங்கே உள்ள சிற்பங்கள் எல்லாம் தமிழர் பாரம்பரியத்தைப் பறைசாற்றுபவையாக உள்ளன. ராஜராஜ சோழன் சிலை, கல்லணை, பண்பாட்டுக் கலையைப் பேசும் சுவர் ஓவியங்கள் எனப் பலவற்றைச் செய்துள்ளனர். மேலும் சுற்றுச்சூழலுக்கு உகந்த விமானநிலையம் இது. இது வெப்பத்தை வெளியிடாது. கழிவுநீரை வெளியிடாது. இங்குப் பயன்படுத்தப்படும் மின்சாரமானது நகரத்திற்குத் தேவையான மின்சாரத் தேவையைப் பாதிக்காது. இங்கே மின்சார பயன்பாடு என்பது மிகமிக அதிகம். 24 மணிநேரமும் குளிர்சாதனப் பெட்டிகள் இயக்கப்படும். மின் விளக்குகள் அதிகமாகப் பயன்படுத்தப்படும். சுமைகளைத் தூக்கிச் செல்லும் சாதனங்கள் அதிக மின்சாரத்தைச் செலவழிக்கும். இப்படி முழுக்க முழுக்க மின்சார பயன்பாடு அதிகமாகத் தேவையாகும். அதற்கான மின்சாரத்தை இது நகரத்திலிருந்து பெறாது. அதை உற்பத்தி செய்து கொள்ளும் அளவுக்குத் திட்டமிட்டு இந்த விமானநிலையம் கட்டப்பட்டுள்ளது. பாம்பே ஐஐடி தொழில்நுட்பத்துடன் இங்கே உருவாகும் கழிவுநீரை மறுசுழற்சி செய்து கொள்ளும்படி கட்டி உள்ளனர். அப்படி மறுசுழற்சி செய்யப்படும் நீரானது அங்குள்ள தோட்டச் செடிகளுக்குப் பாய்ச்சப்படுகிறது. அப்படிதான் இதன் முழு வடிவம் உருவாக்கப்பட்டுள்ளது. உள்ளே வருவதற்காக 60 எமிகிரேஷன் கவுண்டர்கள் உள்ளன. வெளியே செல்வதற்கு 40 வாயில்கள் உள்ளன. மேலும் 78 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்ற உள்ளது. அது பிப்ரவரிக்குள் முடிவடைய உள்ளது. அதையும் சேர்த்தால் கிட்டத்தட்ட இந்த விமானநிலையத்தின் அளவு 200 ஏக்கர் வரை வரும். சென்னைக்கு அடுத்ததாக வருவாயில் 2வது இடத்தில் உள்ளது. இந்திய அளவில் பிச்சியான பன்னாட்டு விமானநிலைய பட்டியலில் 11வது இடத்தில் திருச்சி உள்ளது. நமக்குத் திருவனந்தபுரம், அகமதாபாத் ஆகிய இரண்டும் நேரடி போட்டியாக உள்ளன என்றார்.