கோவை அருகே தோட்டத்தில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம். 500 வாழை மரங்கள் சேதம்…

கோவை மேற்கு தொடர்ச்சி மலையைஒட்டி உள்ள பொன்னூத்து பகுதியில் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிக அளவில் உள்ளன .அங்கு 50க்கும் மேற்போட்டு காட்டு யானைகள் உள்ளன .இந்த நிலையில் வரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கோவர்தன் , ரங்கசாமி ஆகியோரின் வாழைத்தோட்டங்களில் நேற்று 7 காட்டுயானைகள் குட்டியுடன் புகுந்தது. அங்கிருந்த 500க்கும் மேற்பட்ட வாழை மரங்களை தின்றும் மிதித்தும் நாசப்படுத்தியது. இதை அறிந்த விவசாயிகள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.வனத்துறையினர் விரைந்து வந்து 2 மணி நேரம் போராடி காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர். இது குறித்துபாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறியதாவது:- வெட்டும் நிலையில் இருந்த வாழைகளை யானைகள் தின்றும் மிதித்தும் சேதப்படுத்தி விட்டது. இதற்கு வனத்துறை உரிய இழப்பீடு வழங்க வேண்டும். என்று கூறினார்கள்.