சிறுத்தை தாக்கி 4 வயது சிறுமி பலியான பரிதாபம்..

அரக்காடு பகுதியில் வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த சிறுமியை திடீரென்று சிறுத்தையொன்று தாக்கியது. கழுத்தில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சை பலனின்றி பலியானார். இச்சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுத்தை தாக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருந்தது