வாவ் சூப்பர்!! உலகிலேயே தலைசிறந்த முறையில் கல்வி கற்று தரும் நாடு இதுதான்…எங்கே இருக்குனு தெரிஞ்சுக்கணுமா..?

நம்முடைய எல்லோருடைய வாழ்க்கையிலும் கல்வி என்பது மிக முக்கியமான ஒன்று. 3 வயது முதலே பள்ளியில் குழந்தைகளின் பெற்றோர்கள் சேர்த்துவிடுகிறார்கள்.

பெற்றோர்களை விட்டு பிரிந்து இருக்க தைரியமில்லாத அந்த வயதிலேயே குழந்தைகளுக்கு கல்வியை கற்று கொடுக்கிறார்கள். பிறருடன் பழக விடுகிறார்கள். சிறு வயதிலேயே அந்த குழந்தைகளுக்கு கல்வி, விளையாட்டு என அனைத்தையும் சொல்லிக் கொடுத்துவிட்டு, எட்டாம் வகுப்பு முதல் எல்லாவற்றையும் விட்டுவிட்டு படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள். பள்ளிப்படிப்பை முடித்த பிறகு இன்ஜினியரிங், மருத்துவம் இதுதான் படிக்க வேண்டும் என்று பெற்றோர் தங்களுடைய குழந்தைகளை கட்டாயப்படுத்துகிறார்கள்.

இதனால் ஒரு சில மாணவர்கள் எங்களுடைய ஆசை வேறு ஆனால் பெற்றோர்கள் வற்புறுத்துகிறார்கள் என்று புலம்புவது உண்டு. இதற்கு மிகப்பெரிய காரணம் என்ன என்று பார்த்தால் நம்முடைய Education system இல் இருக்கும் ஒரு மிகப்பெரிய பிரச்சினை தான். இது நம்முடைய நாட்டில் மட்டுமல்ல உலகத்தில் நிறைய நாடுகளில் இப்படித்தான் இருக்கிறது. ஆனால் இதில் ஒரு நாடு மட்டும் வித்தியாசமாக யோசித்து அவர்களுடைய நாட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு இப்படி இல்லாமல் வித்தியாசமாக கல்வியை கற்றுக்கொடுக்கிறார்கள். அந்த நாடு என்னவென்றால் பின்லாந்து. இந்த நாடு ஐரோப்பாவில் உள்ளது.

இங்குள்ள மாணவர்கள் மற்ற நாடுகளில் உள்ள மாணவர்களை விட படிப்பில் தேர்ந்தவர்களாக உள்ளார்கள். இந்த நாட்டில் இருந்துதான் நோக்கியா போன் வந்தது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நாட்டில் ஏழு வயதில் தான் முதன்முதலில் குழந்தைகளை பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப வேண்டும் என்பது கட்டாயம். அதுவரை குழந்தை தன்னுடைய பெற்றோரின் அரவணைப்பில் தான் இருக்கவேண்டும். பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை பார்த்துக் கொள்ள வேண்டும். பள்ளிக்கு செல்லும் வரை பெற்றோர் தன்னுடைய குழந்தைகளுக்கு அனைத்து விஷயங்களையும் சொல்லிக் கொடுக்க வேண்டும். இதன் முக்கிய நோக்கம் என்னவென்றால் பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு வேலைக்கு செல்லாமல் அவர்களுக்கு அந்த வயதில் தேவையான விஷயங்களை சொல்லி கொடுக்க வேண்டும் என்பதுதான்.

மேலும் அந்த நாட்டில் தேர்வு என்பதே மாணவர்களுக்கு கிடையாது. தேர்ச்சி, தோல்வி என்பதும் கிடையாது என்பது சுவாரசியமான விஷயம். இதன் மூலம் ஆசிரியர்களுக்கு மாணவர்கள் மேல் நம்பிக்கையும், மாணவர்களுக்கு தங்களின் மேல் நம்பிக்கையும் உருவாகிறது. அடுத்ததாக அந்த நாட்டில் உள்ள ஆசிரியர்கள் மருத்துவர்கள் மற்றும் இன்ஜினியர்களுக்கு சமமாக மதிக்கப்படுகிறார்கள். நம்முடைய நாட்டை போல சாதாரணமாக அங்கு ஆசிரியராக முடியாது. நம் நாட்டில் மருத்துவராக சீட் கிடைப்பது எவ்வளவு கஷ்டமா? அதேபோன்று அங்கு ஆசிரியர் சீட் வாங்குவதற்கு மிகவும் கஷ்டம். அதேபோல அவர்களுக்கு சம்பளமும் அதிக அளவில் வழங்கப்படுகிறது.

அந்நாட்டில் குழந்தைகள் பள்ளிக்குச் சென்ற முதல் ஆறு வருடங்களுக்கு அவர்களுக்கு Grading System என்பது கிடையாது. அந்த குழந்தைகளுக்கு கிட்டத்தட்ட 14 வயது வரைக்கும் கிரேடு சிஸ்டம் என்பது கிடையாது. ஒரு நாளுக்கு நான்கு மணி நேரம் மட்டுமே வகுப்பு நடத்தப்படுகிறது. ஒரு மனிதனுடைய கவனிக்கும் திறன் என்பது நான்கு மணி நேரம் மட்டுமே. அடுத்தவர் சொல்வதை கேட்டு புரிந்துகொள்ளும் capacity என்பது நான்கு மணி நேரம் மட்டுமே concentration பண்ண முடியும். எனவே இந்த நாட்டில் நான்கு மணி நேரம் மட்டுமே வகுப்பு நடத்தப்படுகிறது. இந்த நான்கு மணி நேரத்தில் ஒவ்வொரு வகுப்பிற்கு இடையில் 15 நிமிடம் இடைவெளி விடப்படுகிறது.

இது எதற்காக என்றால் ஒரு வகுப்பு முடிந்து அந்த 15 மணி நிமிட இடைவெளியில் அந்த குழந்தை ரிலாக்ஸ் ஆகி அடுத்த பாடப்பிரிவின் வகுப்பிற்கு தயாராகி விடுகிறது. அதேபோல இந்த நாட்டில் மாணவர்கள் அரை மணி நேரத்திற்கு மேல் வீட்டுப்பாடங்கள் செய்யக்கூடாது என்பதையும் கடைப்பிடிக்கிறார்கள். அந்த வீட்டுப் பாடத்தை மாணவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து தான் முடிக்க வேண்டும். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் மதிய உணவு இடைவேளை 75 நிமிடங்கள் கொடுக்கப்படுகிறது.

இது இது எதற்காக என்றால் சாப்பிடுவதற்கு மட்டுமல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து விளையாடுவதற்கும், பேசுவதற்கும், பள்ளியில் படிக்கும் சீனியர் மற்றும் ஜூனியர் மாணவர்களுடன் நல்ல ஒரு பிணைப்பை ஏற்படுத்துவதற்காக இந்த இடைவெளி விடப்படுகிறது. எல்லாவற்றையும் விட மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் படிப்பதற்கு மிக முக்கிய தேவையாக இருப்பது பணம். ஆனால் பின்லாந்து நாட்டில் மாணவர்களின் கல்விக்கான பணத்தை அரசே ஏற்றுக்கொள்கிறது.

அனைவருக்கும் ஒரேவிதமான கல்வி தான் கற்பிக்கப்படுகிறது. சிபிஎஸ்இ, மெட்ரிகுலேஷன் போன்று எந்தவித பிரிவும் கிடையாது. அது பிரதமருடைய குழந்தையாக இருந்தாலும் சரி பிச்சைக்காரரின்குழந்தையாக இருந்தாலும் சரி. எல்லோருக்கும் அரசே பணம் செலவு செய்து படிக்க வைக்கிறது. ஏழையாக இருந்தாலும் சரி, பணக்காரராக இருந்தாலும் சரி எல்லாருக்கும் ஒரே மாதிரியான கல்வி அங்கு கற்பிக்கப்படுகிறது. ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு அங்கில்லை. மக்களுடைய வரிப்பணத்திலிருந்து அந்த நாட்டில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு அதிக அளவில் சம்பளம் வழங்கப்படுகிறது. மாணவர்களுடைய பெற்றோர்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தில் வரிப்பணம் செலுத்துகிறார்கள்.

அந்த வரிப்பணத்தில் ஆசிரியர்களுக்கு நல்ல சம்பளம் கொடுத்தால் அவர்களுடைய குழந்தைகள் நல்ல கல்வியை பெற்றுக் கொள்கிறார்கள் என்று அந்நாட்டு அரசு கூறுகிறது. இதன் மூலம் அந்நாட்டில் நல்ல ஒரு இளைய சமுதாயம் உருவாகிறது. மேலும் எந்த ஒரு குழந்தையும் தான் ஒரு ஏழை வீட்டில் பிறந்து விட்டேன் என்ற தாழ்வு மனப்பான்மையும், பணக்கார வீட்டில் பிறந்து விட்டேன் என்ற எண்ணமும் இருக்கக்கூடாது என்பதே அந்நாட்டின் நோக்கம். அனைவரும் சமம் என்பதை கொண்டு வருவதற்காகவே இதை கொண்டு வந்துள்ளார்கள். அங்கு 100% கல்வியை இலவசமாக அரசே கொடுக்கிறது என்பது உண்மை. கல்வியை ஒரு தொழிலாக பார்த்துக் கொண்டிருக்கும் இந்த உலகத்தில் பின்லாந்து அரசு இப்படி ஒரு நல்ல செயலில் ஈடுபட்டு வருகிறது என்பது பாராட்டக்கூடிய விஷயமாகும்.