சர்வதேச செஸ் கூட்டமைப்பின் கீழ் 2500 புள்ளிகளை கடந்து கிராண்ட் மாஸ்டர்களாக திகழும் 3 செஸ் வீரர்களை தொடர்ச்சியாக வீழ்த்தி வெற்றி பெற்றால் கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெறலாம்.
அந்த 3 கிராண்ட்மாஸ்டர்களும் வெவ்வேறு நாடுகளை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும்.
அந்த வகையில், 2500 புள்ளிகளை பெற்று இந்தியாவின் 75வது கிராண்ட்மாஸ்டர் ஆனார் பிரணவ் வெங்கடேஷ். இந்தியாவிலிருந்து ஏற்கனவே 74 கிராண்ட்மாஸ்டர்கள் இருந்த நிலையில், 75வது கிராண்ட் மாஸ்டராக பிரணவ் வெங்கடேஷ் உயர்ந்திருக்கிறார்.
தமிழகத்தை சேர்ந்த 16 வயது இளம் செஸ் வீரரான பிரணவ் வெங்கடேஷ், சர்வதேச செஸ் கூட்டமைப்பின் கீழ் 2500 புள்ளிகளுக்கு மேல் பெற்று இந்தியாவின் 75வது கிராண்ட்மாஸ்டராக உருவானார்.
தமிழகத்திலிருந்து கிராண்ட்மாஸ்டரான 27வது செஸ் வீரர் பிரணவ் ஆவார். இதற்கு தமிழகத்தில் 26 கிராண்ட்மாஸ்டர்களாக இருந்தனர். தற்போது அவர்களுடன் பிரணவும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.