வால்பாறை அக்காமலை புதுப்பாடி பகுதியில் நள்ளிரவில் உலா வரும் காட்டு யானைகள்..!!

கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் தற்போது காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் காட்டு யானைகள் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் நுழைவதை தடுக்க வனத்துறையினர் துரித நடவடிக்கை மேற்க்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட் புதுப்பாடி பகுதியில் நேற்று நள்ளிரவில் புகுந்த மூன்று காட்டுயானைகள் அங்குள்ள மக்கள் குடியிருப்பு பகுதியில் நுழைந்துள்ளது. தகவலறிந்து உடனே அப்பகுதிக்கு வந்த வனத்துறையினர் நீண்ட போராட்டத்திற்கு பின் மூன்று காட்டுயானைகளை அருகிலுள்ள வனப்பகுதியில் விரட்டியுள்ளனர். இந்நிலையில் வனத்துறையினர் அச்சமடையுமளவிற்கு பிளிறியவாறு சென்றுள்ளது. யானைகளை வனத்துறையினர் விரட்டிதைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்துள்ள நிலையில் மீண்டும் காட்டுயானைகள் மக்கள் குடியிருப்புக்களில் நுழையாதவாறு வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.