வால்பாறையில் தனியார் தோட்ட நிர்வாகத்தினரை கண்டித்து 27 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் அறிவிப்பு..!

கோவை மாவட்டம் வால்பாறையில் தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு சார்பாக கூட்டுக்குழுவின் தலைவர் வால்பாறை வீ.அமீது தலைமையில் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் முன்னிலையில் அவசர ஆலோசனைக் கூட்டம் கிரீன் ஹில்ஸ் ஹோட்டலில் இன்று நடைபெற்றது . அப்போது அரசு தேயிலைத் தோட்டக்கழகத்தில் தொழில் வரி தொழிலாளர்களுக்கு பிடித்தம் செய்யாத நிலையில் தனியார் தோட்டத் தொழிலாளர்களுக்கு தொழில்வரி பிடித்தம் செய்யும் தனியார் தோட்ட நிர்வாகங்களை கண்டித்து வருகிற 27 ஆம் தேதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்வதோடு கண்டன ஆர்ப்பாட்டமும் வால்பாறையில் நடத்தப்போவதாக அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் அனைத்து தொழிற்சங்கங்களின் தலைவர்களும் நிர்வாகிகளுடன் தோட்டத்தொழிலாளர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்..