நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை கடத்துவது ஏன்… – சீமான் கேள்வி..?

நாம் தமிழர் கட்சி சிறிய கட்சியாக இருக்கும்போது அதன் வேட்பாளர்களை கடத்துவது ஏன் என்றும் வேட்பாளர்களின் உறவினர்களை மிரட்டுவது ஏன் என்றும் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். சிவகங்கையில், நகர்புற உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்த வேட்பாளர்களின் அறிமுக கூட்டத்திம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த சீமான், தமிழக தேர்தல் ஆணையத்தால் 3வது பெரிய கட்சியாக அறிவிக்கப்பட்ட நாம் தமிழர் கட்சியினை அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைக்கவில்லை, மதிக்கவில்லை. தேர்தல் நேரத்தில் எங்களது கட்சிகாரர்களை கடத்துவது ஏன்? உறவினர்களை அச்சுறுத்துவது ஏன்? பேரம் பேசுவது ஏன்? என கேள்வி எழுப்பினார்.

தேர்தல் ஆணையம் ஒரு நாடக கம்பெனி என குற்றம்சாட்டியவர், மாற்றம் வேண்டும் என்று சொல்லிக்கொண்டு இருபெரும் கட்சிகளோடு கூட்டணி வைத்தால் ஏமாற்றம்தான் ஏற்படும் என்றார். தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆதி திராவிட நலத்துறை தவிர பிற துறை அமைச்சர் பதவி வழங்காதவர்கள் சமுக நீதியை பற்றி பேசலாமா? என கேள்வி எழுப்பினார். பெரியார் சொன்ன சமூகநீதியை பிறர் பேசலாம் ஆனால் நாம் தமிழர் கட்சிதான் செயல்படுத்தும். சமுகநீதி என்று திமுக கூறுவது நாடகம்தான். நாடக ஆசிரியரின் மகன் ஸ்டாலின் அதனை தொடர்வதாக குறிப்பிட்டார்.

மேலும் பாஜக-அஇஅதிமுக தனித்து போட்டி என்பது நாடாளுமன்ற தேர்தலில் தொடருமா? என கேள்வி எழுப்பியவர், நாடாளுமன்ற தேர்தலில், பாஜக தனித்து போட்டியிட்டு, நாம் தமிழர் கட்சியைவிட 1 ஒட்டு கூடுதல் வாங்க முடியுமா? என சவால் விட்டார். அதிகம் லாபம் ஈடும் தொழிலாக அரசியல் மாறிவிட்டது என வேதனை தெரிவித்தவர், MP, MLA ஐ விட வார்டு கவுன்சிலர் அதிகம் லாபம் ஈட்டுகின்றனர் என்றும், சேர்மன், மேயர் தேர்வு மறைமுகமாக நடப்பது பணநாயகத்திற்கு வழிவகுக்கும் என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து காங்கிரஸ் , பாஜக ஆட்சியில் இந்தியா 130 கோடி மக்களின் நாடாக இல்லாமல் சில, பல முதலாளிகளின் சொந்த வீடாக திகழ்கின்றது என வேதனை தெரிவித்த சீமான், மக்கள் ஆட்சியின் தத்துவத்தை ஏற்றுகொண்ட நாட்டில் மக்களாட்சியின் தலைவனை தேர்வு செய்ய முடியாவிட்டால் அது ஜனநாயகமா? என்ற சீமான், மக்களால் தேர்வு செய்யபடாதவாதவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்க கூடாது என்றும், காங்கிரஸ் – பாஜக கட்சிகள்தான் வேறு, இருவருக்கும் கொள்கை வேறுபாடு கிடையாது எனவும் தெரிவித்தார்.