திருச்சி பாராளுமன்ற தொகுதியை வெல்லப்போவது யார்..? அதிமுகவா.. திமுகவா…

திருச்சி லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் 4 முறை வென்றுள்ளது. அதிமுக 3 முறை, மதிமுக, திமுக, பாஜக தலா ஒரு முறை வென்றுள்ளன. சிபிஐ கட்சி 2 முறை இத்தொகுதியில் வென்றுள்ளது. திருச்சி தொகுதியில் திமுக, அதிமுகவுடன் காங்கிரஸ், மதிமுக ,சிபிஐ மற்றும் பாஜகவுக்கும் சற்று வாக்கு வங்கி இருக்கிறது. திமுகவும் அதிமுகவும் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கக் கூடிய தொகுதிகளில் திருச்சியும் ஓன்று. இம்முறை திமுக அணியில் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோ போட்டியிடுவதால் நட்சத்திர தொகுதியாகி இருக்கிறது. அதிமுக இம்முறை நேரடியாக களம் காண்கிறது. தொழிலாளர்களின் வாக்கு வங்கி திமுக- இடதுசாரிகள்- மதிமுக கூட்டணிக்கு வலிமை சேர்க்கிறது. திருச்சியில் காங்கிரஸ் கட்சியின் அடைக்கலராஜ் அதிமுக முறை வென்றுள்ளார். இத்தேர்தலில் மதிமுக போட்டியிடும் ஒரே ஒரு தொகுதி என்பதால் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. அதிமுகவும் வெல்வதற்கான முழு வீச்சில் களப் பணியில் ஈடுபட்டிருக்கிறது.