யாருக்கு யாரு தடை விதிக்கிறது… அமெரிக்கா உடனான அனைத்து உறவுகளையும் துண்டித்து ரஷ்யா அதிரடிமுடிவு.!!

ரஷ்யா போரை கைவிட வேண்டும், உக்ரைனில் இருந்து ரஷ்ய படைகளை வெளியேற்ற வேண்டும் என்று சர்வதேச சமூகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது..

எனினும் ரஷ்யா யார் பேச்சையும் கேட்காமல் போரை தொடர்ந்து வருவதால், உலக நாடுகளில் இருந்து ரஷ்யாவை தனிமைப்படுத்துவதாக கூறி அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, ஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதித்தன. அமெரிக்கா பெல்ஜியம், பின்லாந்து மற்றும் கனடா ஆகிய நாடுகள் பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரியா, இத்தாலி, செக் குடியரசு, போலந்து, ஸ்லோவேனியா, எஸ்டோனியா, லாட்வியா, லிதுவேனியா, ருமேனியா மற்றும் லக்சம்பர்க் ஆகிய நாடுகள் ரஷ்ய விமானங்கள் தங்கள் வான்வெளியை பயன்படுத்த முடியாது என்று அறிவித்துள்ளன.

இதே போல ஐரோப்பிய யூனியன், இங்கிலாந்து, கனடா, அமெரிக்கா ஆகியவை தேர்ந்தெடுக்கப்பட்ட ரஷ்ய வங்கிகளுக்கு ” SWIFT’ எனப்படும் சர்வதேச பணப்பரிவர்த்தனை மேற்கொள்ள தடை விதித்துள்ளன. எனினும் மேற்கத்திய நாடுகளின் பொருளாதார தடைகளை எதிர்கொள்ளும் திறன் ரஷ்யாவுக்கு உள்ளது எனவும், அந்த பொருளாதார தடையை தங்களால் அகற்ற முடியும் என்றும் ரஷ்யா கூறிவருகிறது.

இந்நிலையில் சர்வதேச விண்வெளி நிலையத்தில் அமெரிக்கா உடனான தனது அனைத்து உறவுகளையும் துண்டிப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது. அமெரிக்காவுடன் ராக்கெட் எஞ்சின்கள் வழங்குவதையும் நிறுத்தப் போவதாகவும் ரஷ்யா கூறியுள்ளது. அந்த வகையில், தனது விண்வெளி ராக்கெட்டில் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஜப்பானின் கொடிகளை ரஷ்யா அகற்றி உள்ளது. எனினும் ரஷ்யாவின் விண்வெளி ராக்கெட்டில் இந்திய கொடியை அகற்றவில்லை.

அமெரிக்கா, ரஷ்யா, கனடா, ஜப்பான், ஐரோப்பா ஆகிய நாடுகளால் இணைந்து உருவாக்கப்பட்டது சர்வதேச விண்வெளி நிலையம். இந்த நாடுகள் ஒன்றிணைந்து சர்வதேச விண்வெளி பணிகளையும், விண்வெளி ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகின்றன. தற்போது இந்த சர்வதேச விண்வெளி நிலையத்தில் அமெரிக்கா உடனான அனைத்து உறவுகளையும் துண்டித்து கொள்வதாக ரஷ்யா கூறியுள்ளது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று கூறப்படுகிறது.