வாட்ஸ் அப் வாடிக்கையாளர்களே உஷார்!! ஹார்டின் விட்டால் 5 ஆண்டுகள் சிறையாம்…

சமூக வலைதளங்கள் மூலம் குற்றங்கள் அதிகரித்து வருவதால் அதனை தடுக்கும் வகையில் சவுதி அரேபியா அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.

அந்த வகையில் வாட்ஸ்ஆப் செயலியில் சிவப்பு நிற குறியீடான ஹார்ட் இமேஜியை அனுப்பி பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தால் அந்த நபருக்கு இரண்டு முதல் ஐந்து ஆண்டுகளுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சவுதி அரேபிய நாட்டு சட்டப்படி ஹார்டின் இமேஜியை அனுப்பி தொந்தரவு செய்வதாக புகார்கள் அளிக்கப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால் அந்த குற்றவாளிக்கு 2 முதல் 5 ஆண்டுகள் சிறை தண்டனையோ அல்லது ஒரு லட்சம் சவுதி ரியால் அபராதம் விதிக்கப்படும் (இந்திய மதிப்பில் 20 முதல் 60 லட்சம் ரூபாய்).

மேலும், அனுமதியின்றி உரையாடல் தொடங்கினாலும் பாதிக்கப்பட்டவர்கள் அதிகாரிகளிடம் புகார் அளிக்கலாம் என்றும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் குறுஞ்செய்தி அனுப்பியவரே பொறுப்பேற்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.