என்னங்கடா இது… புதுசு புதுசா பயம் பொருத்திரிங்க… காதல் திருமணம் செய்த இரு இளைஞர்கள்: தாலிக் கட்டி.. குங்குமம் வைத்து… நடந்த திருமணம்..!!

உலகம் எங்கும் தன்பால் ஈர்ப்பாளர்கள் தங்கள் திருமணத்தை பகிரங்கமாக அறிவித்து வரும் நிலையில் தமிழகத்தில் தற்போது அந்த நிலை ஏற்பட்டுள்ளது.

சேலத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் ஒருவருக்கொருவர் மாலை மாற்றிக்கொண்டு திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறி உள்ளது . இரு இளைஞர்களில் ஒருவர் தாலிக்கொட்டி கொண்டு திருமணம் செய்து கொண்டனர்.

சேலத்தில் உள்ள கோவில் ஒன்றில் கிருஷ்ணா என்பவர் தனது நண்பர் கார்த்திக் தாலி கட்டி குங்குமம் வைத்து திருமணம் செய்து கொண்டார். இது தொடர்பாக அவர் கூறியதாவது “எங்கள் திருமணத்தை யாராவது நிறுத்தி விடுவார்களோ என்ற பயம் எங்களுக்குள் இருந்தது. திருமணம் நடந்தபோது மகிழ்ச்சியில் எங்களுக்கு கண்ணீர் வந்துவிட்டது” என்று கூறியுள்ளனர். இவர்களது திருமணத்திற்கு பல தரப்பினர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த திருமணம் தொடர்பான புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.