ஒரு அறை… அடுத்த நொடியே பதிலடி கொடுத்த இளைஞர்!

ற்போதெல்லாம் சமூகவலைத்தளங்கள் வந்துவிட்டதால் எது நடந்தாலும் செல்போனில் படம் பிடித்து போட்டு விடுகிறார்கள்.மக்களை பாதுகாக்கும் பணியில் இருக்கும் காவல்துறை அதிகாரிகளில் சிலர் தவறு செய்யும் போது அதை கூட வீடியோ எடுத்து போடுகிறார்கள். இதனால், இன்றைய இளைஞர்களில் சிலருக்கு காவல்துறை மீது மரியாதையே இல்லாமல் போய்விட்டது. அதோடு, காவல் அதிகாரிகளை அவர்கள் எதிர்த்து பேசும் சம்பவங்களும் நடக்கிறது.

இந்நிலையில்தான், தஞ்சாவூரில் விடுதலை சிறுத்தை கட்சியினர் சாலைமறியல் போராட்டம் நடத்திய போது சாலையில் சென்ற ஒரு இளைஞர் தனக்கு வழியிடுமாறு வி.சி.கவினரிடம் வாக்குவாதம் செய்தார். அப்போது அங்கே வந்த போலீஸ் எஸ்.,ஐ இளைஞரை அங்கிருந்து செல்லுமாறு கூறினார். அப்போது ‘போறியா.. ஒரு அறை விடவா’ என எஸ்.ஐ கேட்க, இளைஞரோ கொஞ்சமும் பயப்படாமல் ‘அட்ரா பாக்கலாம்’ என சொல்ல , கோபமடைந்த எஸ்.ஐ அந்த இளைஞரின் கன்னத்தில் ஒரு அறைவிட்டார். உடனே அந்த இளைஞரும் எஸ்.ஐ கன்னத்தில் பளார் விட்டார். எனவே, அங்கிருந்த காவல்துறை அதிகாரிகள் அந்த இளைஞனை வலுக்கட்டாயமாக போலீஸ் வேனில் ஏற்றி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.பொதுமக்கள் செல்லும் பாதையை மறித்து போராட்டம் செய்தது விசிகவின் தவறு. அந்த இளைஞரை அடித்தது போலீஸ் அதிகாரியின் தவறு என சிலரும், அந்த இளைஞரின் உடல்மொழி ரவுடி போல இருக்கிறது எனவும் சொல்வதோடு, அரசு யார் மீது நடவடிக்கை எனவும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.