ஆழியாருக்கு பைக்கில் சுற்றுலா சென்ற நண்பர்கள் 2 பேர் மரத்தில் மோதி பரிதாபமாக உயிரிழப்பு..

பொள்ளாச்சி மக்கினாம்பட்டி ஆர்.கே.நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது
மகன் குணாளன் (வயது 19). இவரது நண்பர் ஊத்துக்காடு பகுதியை சேர்ந்தவர்
சந்தோஷ் (22). இருவரும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தனர்.

இந்த நிலையில் இருவரும் நேற்று சுதந்திர தின விடுமுறையையொட்டி
நண்பர்களுடன் மோட்டார் சைக்கிள்களில் ஆழியாருக்கு சுற்றுலா
சென்றனர்.பின்னர் மாலை அனைவரும் வீடு திரும்பினர். குணாளன் மற்றும்
சந்தோஷ் இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் பொள்ளாச்சி ரோட்டில்
வந்தனர். மோட்டார் சைக்கிளில் சந்தோஷ் ஓட்டி வந்தார். வால்பாறை ரோடு
அங்கலக்குறிச்சி அருகே வந்தபோது முன்புறம் சென்ற ஒரு காரை முந்தி செல்ல
முயற்சி செய்ததாக தெரிகிறது. அப்போது எதிரே வந்த ஒரு கார் மீது மோதி
விடாமல் இருக்க சந்தோஷ் மோட்டார் சைக்கிளை திருப்பினார்.
மோட்டார் சைக்கிள் திடீரென காட்டுப்பாட்டை இழந்து சாலைரோம் இருந்த
மரத்தில் மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம்
அடைந்தனர். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அந்த வழியாக சென்றவர்கள் 2
பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில்
சிகிச்சைக்கு சேர்த்தனர்.

அங்கு அவர்களை பரிசோதனை செய்த டாக்டர் 2 பேரும் வரும் வழியிலேயே
இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து ஆழியார் போலீசாருக்கு தகவல
தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்த 2 பேரின் உடலையும்
மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுற்றுலா சென்ற நண்பர்கள் 2 பேர் விபத்தில் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.