பெற்றோர்கள் கொரோனாவால் உயிரிழந்ததால் மகன் எடுத்த விபரீத முடிவு ..

கோவை துடியலூர் அருகே உள்ள கே. கே. புதூர் ,மஞ்சேஸ்வரி காலனியை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 40) டிரைவர்.இவரது பெற்றோர்கள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனாவால் உயிர் இழந்தனர்.அதன் பிறகு ஆனந்தன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானார்.எந்த வேலைக்கும் செல்வதில்லை.இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த ஆனந்தன் நேற்று அவரது வீட்டில் உள்ள மின்விசிறி கொக்கியில் சேலையை கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி ஜெயலட்சுமி துடியலூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் விசாரணை நடந்து வருகிறது.