நீலகிரி: அங்கன்வாடியில் சட்ட உரிமை நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் பொங்கல் விழா…

நீலகிரி மாவட்ட சட்ட உரிமை நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் பொங்கல் பண்டிகையை வரவேற்கும் விதமாக கூடலூர் கோழி பாலம் பகுதியில் அமைந்துள்ள அங்கனவாடியில் பொங்கல் தினத்தை முன்னிட்டு சட்ட உரிமை நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் எஸ் முத்துராமலிங்கம் அவர்களின் ஆலோசனைக்கிணங்க நீலகிரி மாவட்ட தலைவர் B. R வினோத் தலைமையில், நிரஞ்சினி,முன்னிலையில் நடைபெற்றது, விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சங்கத்தின் நிர்வாகிகள் உமா, உஷா, சசிகலா, செலமா, சபிதா, பிரியா, கௌரி, உதயகுமாரி, ராதிகா ஆர்.ராத்திகா, நித்தியா, மற்றும் சட்ட உரிமை நுகர்வோர் பாதுகாப்பு சங்க மகளிர் என இணைந்து பொங்கல் திருவிழா நிகழ்ச்சிக்கு ஏற்பாடுகள் செய்திருந்தனர், சங்கத்தின் மகளிர் அணியினர் பொங்கல் நாளை முன்னிட்டு அனைவருக்கும் மண்பானையில் பொங்கல் செய்து நிகழ்ச்சியில் வந்த அனைவருக்கும் வழங்கினர், இதில் அப்பகுதியில் உள்ள குழந்தைகளின் பெற்றோர் குடும்பத்தினர் திரளாக கலந்து கொண்டனர், சட்ட உரிமை நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்ட தலைவர் B. R. வினோத் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து தெரிவித்தார், தொடர்ந்து இவ்விழாவில் குழந்தைகளுக்கு மருத்துவ முகமும் நடைபெற்றது கூடலூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் குழந்தைகளின் உடல் நிலையை பரிசோதித்து பெற்றோர்களுக்கு தகுந்த ஆலோசனை வழங்கினர், தொடர்ச்சியாக குழந்தைகள் சிறுவர்கள் இணைந்து கலை நிகழ்ச்சிகளும் பாரம்பரிய பொங்கல் நிகழ்ச்சிகளும் நடைபெற்றது, அனைத்து பொதுமக்களுக்கும் சங்கத்தின் நிர்வாகிகள் உறுப்பினர்களுக்கும் சட்ட உரிமை நுகர்வோர் பாதுகாப்பு சங்கத் தலைவர் வினோத் நன்றி கூறி அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் தெரிவித்து விழா நிறைவு பெற்றது.