நாட்டை விட்டு ஓட மாட்டோம்!! நானும் எனது அமைச்சரவை உறுப்பினர்களும் தலைநகரில் தான் உள்ளோம் – உக்ரைன் அதிபர் பதிவு.!!

கிவ் : உக்ரைன் மீது ரஷிய படைகள் 3-வது நாளாக உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகிறது.

உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன. உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது.

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தப்பி சென்றுவிட்டதாக ரஷிய ஊடகங்கள் செய்து வெளியிட்டு வந்தன. வெளிநாட்டில் இருந்தபடி வோலோடிமிர் பேசி வருவதாக ரஷிய ஊடகங்கள் கூறி வந்தன. இந்நிலையில், தானும் தனது அமைச்சரவை உறுப்பினர்களும் தலைநகர் கிவ்-வில் தான் உள்ளதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து உக்ரைன் நாடாளுமன்றத்திற்கு அருகே நின்றபடி, ஜெலன்ஸ்கி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், நாங்கள் அனைவரும் தலைநகர் கிவ்-வில் தான் இருக்கிறோம். நமது ராணுவமும் இங்கு உள்ளது. பொதுமக்கள் இங்கு உள்ளனர். நமது சுதந்திரம், நாட்டை பாதுகாக்க நாம் இங்கு இருக்கிறோம். நாம் இங்கு தொடர்ந்து இருப்போம் என்று கூறியுள்ளார்.