கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் பாஜக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இச்செயல் குழு கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உட்பட பாஜக மேலிட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் மேடையில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழ் மக்கள் மீது பிரதமர் அதிகளவில் பிரதமர் அன்பு வைத்துள்ளார் என தெரிவித்தார்.
ஜனநாயகத்தின் தலைவராக பிரதமர் இருக்கிறார் என கூறிய அவர் ஓன்பது ஆண்டை கடந்து 10 வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதாகவும், அவரை
இன்னும் 5 ஆண்டு காலம் பிரதமராக ஆக்க வேண்டும் என்றார்.
மேலும் தேனீக்களை போல் சுறுசுறுப்பாக பணி செய்ய வேண்டும் எனவும் தமிழகத்தில் இருந்து எத்தனை எம்பிகளை அனுப்ப போகிறோம்ம் என்பதை திட்டமிட வேண்டும் என்றார்.
இந்தியாவை அடிப்படையில் இருந்து பிரதமர் மாற்றியுள்ளார் எனவும், பிரதமர் இன்னொரு பாதையில் அழைத்து சென்றுள்ளார் எனவும் தெரிவித்தார்.
குடிகளை பாதுகாப்பது மன்னனின் முதல் பணி என தெரிவித்த அவர் அதை தான் பிரதமர் செய்து வருகிறார் என்றார். மேலும் உள்நாட்டு அச்சுறுத்தல், அண்டை நாட்டு அச்சுறுத்தல் அனைத்தையும் பிரதமர் எதிர்கொண்டு வருகிறார்.
இந்திய சரித்திரத்தில் மிக அமைதியான வாழ்க்கை நாம் வாழ்ந்து வருகிறோம் என்றார்.
ஜம்மு காஷ்மீர்க்கு ஒரு கோடி பேர் சுற்றுலா பயணம் செய்துள்ளார் என கூறிய அவர், நக்சல் முழுமையாக ஒழிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் பி.எப்.ஐ போன்ற பயங்கரமான இயக்கங்கள் தடை செய்யப்பட்டு தைரியமான நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தார்.
கோவையில் சிலிண்டர் வெடிகுண்டு கலச்சாரம், துப்பாக்கி கலாச்சாரம் தலைத்தூக்கி உள்ளது என தெரிவித்த அவர், தமிழ்நாட்டில்
எப்போது கொலை நடக்கும் , கலவரம் நடக்கும் என்ற அச்சம் மக்களிடையே உள்ளது என்றார். மூன்றாவது பொருளாதர நாடாக நாம் மாறப் போகிறோம் என தெரிவித்த அவர் அதற்கான அடிப்படை பணிகளை பிரதமர் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். மேலும் 350 ஆண்டுகளுக்குப் பிறகு பொருளாதாரத்தில் முன்னேறும் நாளாக நாம் இருப்பதாக தெரிவித்தார். இந்தியாவின் பொருளாதாரம் உயர உயர தமிழ்நாட்டின் பொருளாதாரம் குறைகிறது, ஆனால் மற்ற மாநிலங்கள் முன்னேறி வருவதாகவும் திராவிட அரசின் 30 சதவிகித கமிஷன் தான் தமிழ்நாடு பின்னோக்கி செல்ல காரணம் எனவும் விமர்சித்தார். மே 30ஆம் தேதி முதல் ஜூன் 30-ம் தேதி வரை பிரதமரின் நலத்திட்டங்களை பெரிய இயக்கமாக மக்களிடம் எடுத்து செல்ல உள்ளதாக தெரிவித்தார். பாஜக ஆட்சிக்கு வந்த போது இந்தியாவில் 18,000 கிராமங்களில் மின்சாரம் இல்லை என தெரிவித்த அவர் தற்போது மின்சாரம் இல்லாத கிராமமே கிடையாது என்றார். இதனால் நம்முடைய நாடு 100% மின்சாரம் நிறைந்த நாடாக உள்ளது எனவும் அடிப்படைகளில் இருந்து பாஜக அரசு நாட்டை மாற்றி அமைத்தது எனவும் தெரிவித்தார். மேலும் காமராஜரின் எண்ணத்தின் படி கடைசி வீடு வரைக்கும் தண்ணீர் கொண்டு செல்வதை பிரதமர் குறிக்கோளாக வைத்து செயல்பட்டவர் என தெரிவித்தார்.
பிரதமர் மோடி தான் புதுமை பெண்களை உருவாக்கி வருகிறார் என தெரிவித்த அவர் திராவிட மாடல் அரசை போல வீரவசனம் பேசுவதில்லை என்றார். சுத்தம் சுகாதாரம் வீடு அனைத்தும் பிரதமரின் ஆட்சியில் தான் உயர்ந்துள்ளது எனவும் தெரிவித்தார்.
பாஜக ஆட்சியில் ஒவ்வொரு மனிதரும் மாறி உள்ளனர் எனவும் வாழ்க்கையில் உயர்ந்துள்ளனர் எனவும் தெரிவித்த அவர் கொங்கு மண்டலத்திலும் இதற்கு தடை வரவில்லை என தெரிவித்தார். மேலும் உலக அளவில் இந்தியாவின் பெருமை இந்திய குடிமக்களுக்கு பெற்றுத் தந்தவர் பிரதமர் எனவும் கூறினார்.
ஜல்லிக்கட்டை பொருத்தவரை அதற்கு தடை செய்தது காங்கிரஸ் என தெரிவித்த அவர் பிரதமர் மோடி தலையிட்டு குழு அமைத்து உச்ச நீதிமன்றத்தில் அக்குழு வாதிட்டது. தற்போது ஜல்லிக்கட்டை நடத்த தடையில்லை என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு என்பது பல பரீட்சை எனவும் அனைத்து தீய சக்திகளும் ஒரு அணியில் திரண்டு உள்ளனர் எனவும் விமர்சித்த அவர் நாம் வீடு வீடாக மக்களை சந்திக்க வேண்டும் என்றார். மேலும் இன்றிலிருந்து பாராளுமன்ற தேர்தல் பணி நமக்கு ஆரம்பித்து விட்டது என தெரிவித்த அவர் வெற்றி தோல்வியை தாண்டி உழைப்பை போட வேண்டும் என கேட்டுக்கொண்டார். கூட்டணியில் இருக்கின்றோம் கூட்டணியில் இல்லை தனியாக போட்டி இடுகிறோம் போட்டியிட்டும் வெற்றி பெறவில்லை போன்ற எண்ணங்களை தூக்கி எறிந்து விட்டு உழைக்க வேண்டும் என தெரிவித்தார்.
பகவத் கீதையில் அர்ஜுனருக்கு கிருஷ்ணன் கூறிய, “உன்னுடைய வேலையை மட்டும் நீ செய், எந்த பலனையும் எதிர்பார்க்காதே” என்பதை மேற்கோள் காட்டி பேசிய அவர் வருகின்ற ஏழு மாத காலமும் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் தொண்டர்கள் உழைக்க வேண்டும் என தெரிவித்தார்.