தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. மேலும், மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிகளும் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மீது தேர்தல் பறக்கும் படை அதிகாரி, காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில், “தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், மகளிர் தினத்தை முன்னிட்டு, 300 பெண்களுக்கு இலவச எம்பிராய்டிங் பயிற்சி வழங்க பிரேமலதா விஜயகாந்த், டோக்கன் வழங்கியுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மக்களவை தேர்தலில் தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி வைக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் பிரேமலதா விஜயகாந்த் மீது காவல்நிலையத்தில் புகார் எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.