வேளாங்கண்ணி மாதா திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்..!

வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை தேவாலயத்தில், புனித ஆரோக்கிய அன்னையின் பிறந்த நாள் திருவிழா செப்., 8ம் தேதி கொண்டாடப்படுகிறது.
நேற்று மாலை, கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. ஊட்டி மறைமாவட்ட முதன்மை குரு கிறிஸ்டோபர் லாரன்ஸ், மறைபணி நிலைய இயக்குனர் பிராங்க்லின் ஆகியோர் கொடியேற்றி திருப்பலியை நடத்தினார்கள். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர். தினமும் நவநாள், திருப்பலி நடக்கிறது.ஏற்பாடுகளை பங்குதந்தை ஆரோக்கியராஜ், உதவி பங்குதந்தை அபிஷேக் ரிசோரியா தலைமையில் பங்குமக்கள் செய்து வருகின்றனர்.