வால்பாறை அக்காமலை எஸ்டேட் ஸ்ரீ மகா காளியம்மன், அருள் சக்தி மாரியம்மன் கோவில்களில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை..!!

கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள அம்மன் கோயில்களில் ஆடி மாதத்தில் வரும் கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்கள் வழிபட்டனர். அதேபோல வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட்டில் அமைந்துள்ள ஸ்ரீ மகா காளியம்மன், அருள் சக்தி மாரியம்மன் ஆகிய கோவில்களில் பால்,பன்னீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் செய்து சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்ட நிலையில் அருள் சக்தி மாரியம்மன் கோவிலில் கோவை எலக்ட்ரீசியன் ஆண்டி குடும்பத்தினர் சார்பாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..