உலக யானைகள் தினத்தை முன்னிட்டு வால்பாறையில் வனத்துறையினர் மற்றும் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி..!

கோவை மாவட்டம் வால்பாறையில் உலக யானைகள் தினத்தை முன்னிட்டு வனத்துறையினர் சார்பாக ஆனைமலை புலிகள் காப்பகம் மானாம்பள்ளி வனச்சரக அலுவலர் மணிகண்டன் மற்றும் வால்பாறை வனச்சரக அலுவலர் வெங்கடேஷ் ஆகியோரின் முன்னிலையில் வால்பாறை அரசு கலைக்கல்லூரி வளாகத்திலிருந்து தொடங்கப்பட்ட விழிப்புணர்வு பேரணி அஞ்சலகம் வரை சென்று நிறைவடைந்தது. இந்த பேரணியின்போது யானைகளின் அவசியம் குறித்தும் அவைகளின் வாழ்வாதாரங்கள் மற்றும் யானைகளினால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விரிவாக எடுத்துக்கூறும் வகையில் அதற்கான பதாகைகளை கையிலேந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வனத்துறையினர் மற்றும் கல்லூரி மாணவர்கள அனைவரும் ஆர்வமுடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..