75 வது சுதந்திர தின விழா: விமான பயணிகளுக்கு தேசிய கொடி வழங்கிய பா.ஜ.க தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில தலைவி காயத்திரி ரகுராம்

75 வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்: கோவையில் பயணிகள் மற்றும் கட்சியினருக்கு தேசிய கொடி வழங்கிய பாஜக வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில தலைவி காயத்திரி ரகுராம்.

இந்திய திருநாட்டின் 75 வது சுதந்திர தினம் அனைவராலும் கொண்டாடபட்டு வரும் நிலையில் அனைவரும் அவரவரது வீட்டில் தேசிய கொடியேற்றி கொண்டாட வேண்டும் என அறிவுறுத்தபட்டுள்ள நிலையில் தமிழக பா.ஜ.க வினர் 75 வது சுதந்திர தினத்தை கொண்டாடும் விதமாக மக்களை நேரடியாக சந்தித்து தேசிய கொடியினை வழங்கி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக கோவை வந்த பா.ஜ.க வின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில தலைவி காயத்திரி ரகுராம் பயணிகள் மற்றும் கட்சியினருக்கு தேசிய கொடியினை வழங்கினார். திருப்பூர் நிலகிரி உள்ளட்ட மாவட்டங்களில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ள சென்னையிலிருந்து கோவை விமான நிலையம் வந்தடைந்தார் பா.ஜ.க வின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாநில தலைவி காயத்திரி ரகுராம். விமான நிலையம் வந்த அவருக்கு பா.ஜ.க வினர் உற்சாகமாக மலர் கொத்து கொடுத்து வரவேற்பளித்தனர். இதனையடுத்து விமான நிலையத்திலிருந்த பயணிகள் மற்றும் கட்சியினருக்கு இந்திய நாட்டின் மூவர்ன தேசிய கொடியினை வழங்கினார். வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில செயலாளர் சுறா முரளி, மாவட்ட தலைவர் துளசி, மாவட்ட துணைத் தலைவர் ராஜ்மோகன், சந்திரசேகர், பா.ஜ.க சிறுபான்மையினர் பிரிவு கணபதி ஜான்சன், மாவட்ட செயலாளர் முருகேஷ், சுந்தராபுரம் வசந்தகுமார், பீளமேடு ஜெயமுருகன், காந்திபுரம் பாபு, கணபதி ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.