நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்- தேர்தல் ஆணையம் அறிவிப்பு.!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு தமிழகத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் இயங்க தடை விதித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு நேற்று காலை 10 மணி முதல், வரும் 19-ம் தேதி இரவு 12 மணி வரை டாஸ்மாக் கடைகள் இயங்க தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

அதுபோல், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான பிப்.22-ம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளிலும், அருகில் 5 கி.மீ. சுற்றளவில் உள்ள பகுதிகளிலும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.