மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தில் பாதுகாப்பற்ற சூழ்நிலை: உயிர்பலி ஏற்படும் அபாயம்- வீடியோ இதோ.!!

மேட்டுப்பாளையத்தில் இருந்து கோயம்புத்தூர் செல்லும் அரசு பேருந்து, தனியார் பேருந்து, அவசர கதியில் செல்வது வழக்கமாக உள்ளது .பேருந்தில் பயணிக்கும் பயணிகளை அவசர அவசரமாக ஏற்றி செல்வது வாடிக்கையாக உள்ளது. இந்த சூழ்நிலையில் கோவைகு செல்லும் பேருந்து நிறுத்துமிடத்தில் நகராட்சி பொது கழிப்பிடத்திலிருந்து வரும் கழிவுநீர் மற்றும் மலம் செல்லும் கால்வாய் மற்றும் தொட்டிகள் திறந்து உள்ளதால் பொதுமக்கள் மற்றும் பயணிகள், வெளியூர் வாசிகள் குழியில் விழும் அபாயம் உள்ளது.

கோவை செல்லும் வயது முதிர்ந்த முதியவர்கள் மாற்றுத் திறனாளிகள் கண்பார்வையற்றவர்கள் அரசு பேருந்து பயன்படுத்துகின்றனர். இரவு நேரங்களில் விபத்து ஏற்பட அதிக வாய்ப்புள்ளது எனவே நகராட்சி நிர்வாகம் துரிதமாக செயல்பட்டு விபத்துக்கள் நடக்கா வண்ணம் குழிகளை உடனடியாக பழுது நீக்கி மூட வேண்டும்

மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் நகராட்சி நிர்வாகம் கட்டுப்பாட்டில் உள்ளது மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையர் அமுதா உடனடியாக நடவடிக்கை எடுக்க பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். பெரும் அசம்பாவிதங்கள் மற்றும் விபத்துக்கள் ஏற்படும் முன் நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்..