உக்கடம் – டவுன்ஹாலில் நாளை மின் தடை ..!!

கோவை உக்கடத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இதையொட்டி நாளை( சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வெரைட்டி ஹால் ரோடு, டவுன்ஹால் , டி.கே. மார்க்கெட் ,ஒப்பணக்கார வீதி, செல்வபுரம், கரும்புக்கடை, ஆத்துப்பாலம் ,உக்கடம், சுங்கம் பைபாஸ் ரோடு, கலெக்டர் அலுவலகம் ரயில் நிலையம் பகுதி, அரசு மருத்துவமனை, உக்கடம் லாரிப்பேட்டை , ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்படுகிறது ..இந்த தகவலை உக்கடம் துணை மின்நிலைய செயற்பொறியாளர் துரைசாமி தெரிவித்துள்ளார்.