நீலகிரி உதகையில் மக்களுடன் முதல்வர் குறைதீர்க்கும் நாள் முகாம் திரளான மக்கள் பங்கேற்பு…

தமிழக முழுவதும் நடைபெற்று வரும் மக்களுடன் முதல்வர் என்ற குறைதீர்க்கும் முகாம் நீலகிரி மாவட்டம் பல பகுதியில் நடைபெற்று வருகிறது, உதகையில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் சீனிவாச பெருமாள் திருமண மண்டபத்தில் எட்டு வார்டுகளை சேர்ந்த பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டனர், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாமில் உதகை நகராட்சிக்குட்பட்ட மக்களின் மனுக்களை மக்கள் வருவாய் கோட்டாட்சியர் மகாராஜா பெற்றுக் கொண்டார், நடைபெற்ற முகாமினை உதகை நகராட்சி தலைவர் வாணீஸ்வரி ஆய்வு மேற்கொண்டு பகுதி மக்கள் மற்றும் எட்டு வார்டுகளில் இருந்து வந்த மக்களை தனிப்பட்ட முறையில் விசாரித்து அதிகாரிகளிடம் மனுக்களை கொடுக்க மக்களுக்கு ஆலோசனை வழங்கினார், மற்றும் 17வது வார்டு நகர மன்ற உறுப்பினர் ரஜினிகாந்த் பகுதியிலிருந்து 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் முகாமில் பங்கேற்றனர், கோரிக்கை மனுவை பகுதி நகர மன்ற உறுப்பினர் ரஜினிகாந்த் மக்களுக்கு ஆலோசனை வணங்கி மக்கள் வருவாய் கோட்டாட்சியரிடம்
கொடுக்கப்பட்டது, நடைபெற்ற குறை தீர்க்கும் முகாமில் காலை முதல் மாலை வரை பணியில் செயல்பட்ட வட்டாட்சியர் சரவணகுமார், தனி வட்டாட்சியர் சங்கீதா ராணி, உதகை நகர வருவாய் ஆய்வாளர், Vao ஆச பேபி முதன்மை அலுவலர்கள் பல்வேறு அரசுத் துறையினர் பணியில் இருந்தனர், மக்களுடன் முதல்வர் குறை தீர்க்கும் முகாமிற்கு பல பகுதியிலிருந்து வந்த மக்கள் மாலை 3 மணி வரை கலந்துகொண்டு தங்கள் கோரிக்கை மனுக்களை வருவாய் கோட்டாட்சியர், மற்றும் அரசு அதிகாரிகளிடம ஒப்படைத்தனர் பகுதி நகர மன்ற உறுப்பினர்கள் மக்களோடு இருந்து அனைத்து உதவிகளையும் செய்து தந்தனர்,