கோவையில் மீன் வலையில் சிக்கி உயிருக்கு போராடிய மலைப்பாம்பு: பத்திரமாக மீட்டு வனப் பகுதிக்குள் விட்ட வனத்துறையினர்..
கோவை மாவட்டம் சிறுமுகையை அடுத்துள்ள கிச்சகத்தூர் பவானியாற்றின் பாலத்தின் கீழ் பகுதியில் மலைப் பாம்பு ஒன்று மீன் வலையில் சிக்கி கிடப்பதை அப்பகுதி பொதுமக்கள் பார்த்துள்ளனர். தற்போது பவானியாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் காரணமாக ஆற்று நீரில் அடித்து வரப்பட்டிருக்கலாம் என அப்பகுதி மக்கள் ஆரம்பத்தில் நினைத்துள்ளனர்.
இதனையடுத்து பாம்பு இறந்திருப்பதாக நினைத்து அதனை எடுத்து அப்புறப்படுத்த முயன்ற போது சுமார் 6 அடி நீளமுள்ள மலைப்பாம்பு மீன் வலையில் சிக்கி தப்பிக்க போராடுவதையும், நெளிவதை கண்டுள்ளனர். பின்னர், இச்சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் சிறுமுகை வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் விரைந்து சென்ற வனத்துறையினர் பாம்பினை கத்திரிக்கோல் மற்றும் கத்தி உதவியுடன் பத்திரமாக உயிருடன் மீட்டனர். பின்னர், அதனை அப்பகுதி மக்கள் பத்திரமாக அடர் வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர்.
Leave a Reply