இந்தியாவில் 100 வயதுக்கு மேல் இரண்டரை லட்சம் பேர்- தேர்தல் ஆணையம் தகவல்..!

ந்தியாவில் 100 வயதுக்கு மேல் சுமார் இரண்டரை லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் என்று, இந்திய தலைமை தேர்தல் ஆணையாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கடந்த மாதம் 25-ந்தேதி முதல் தொடங்கிய துணை மற்றும் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி, கடந்த 7-ந்தேதி வரை நடந்தது.

இந்நிலையில், இன்று ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. மேலும், வாக்காளர் விழிப்புணர்வு மற்றும் தேர்தல் பங்கேற்பு என்ற விழிப்புணர்வு பேரணியை தலைமை தேர்தல் ஆணையம் நடத்தியது.

இதில் கலந்துகொண்ட தேர்தல் ஆணையாளர் ராஜீவ்குமார், பின்னர் செய்தியாளர்களை சந்தித்து தெரிவிக்கையில், “நம் நாட்டில் 100 வயதுக்கு மேல் 2.49 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இதனை நான் மகிழ்ச்சியுடன் உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியாவின் முதல் வாக்காளர் ஷியாம் சரண் நேகிக்கு 106 வயதாகும். அவர் இறப்பதற்கு 3 தினங்களுக்கு முன்பு தபால் மூலம் தனது வாக்கினை செலுத்தினார்.

அவருக்குள்ள கடமை உணர்வு பாராட்டப்பட வேண்டியது. வாக்களிப்பதன் மூலம் மட்டுமே ஜனநாயக மரபுகள் முற்றிலும் வலுவாக மாறும்” என்று ராஜீவ்குமார் தெரிவித்தார்.