மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சியில் இருந்தால் மட்டுமே ஒரு மாநிலம் நல்ல முன்னேற்றத்தை அடைய முடியும். என இமாச்சல பிரதேச பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
இமாச்சல பிரதேசத்தில் இருக்கும் 68 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் நவம்பர் 12ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அதன் தேர்தல் முடிவுகள் டிசம்பர் 8ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.
இதற்காக பிரதான காட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இமாச்சல பிரதேச மாநிலத்தில் பிரதமர் மோடி தொடர் பிரச்சாரத்தில் ஈடுபாடு வருகிறார் அதன்படி, கங்கரா எனுமிடத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.
அந்த பிரச்சார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, பிளவு பட்டிருக்கும் காங்கிரஸ் கட்சியால் இமாச்சல பிரதேசத்தில் ஒரு நிலையான ஆட்சியை கொடுக்க முடியாது. காங்கிரஸாரும் அதனை விரும்பவில்லை. ‘ என கூறினார்.
மேலும் , மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சியில் இருந்தால் மட்டுமே ஒரு மாநிலம் நல்ல முன்னேற்றத்தை அடைய முடியும். என குறிப்பிட்ட பிரதமர், நமது நாட்டில் பெண்கள் காங்கிரஸ் அரசால் மிகவும் புறக்கணிக்கப்பட்டனர். என்பதை 2014-ம் ஆண்டுக்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பார்த்தீர்கள்.’என குறிப்பிட்டு பேசினார்.
அடுத்ததாக, விவசாயிகள், கூலி தொழிலாளர்கள், சிறு கடைக்காரர்கள் ஆகியோருக்கு உதவியாக 3,000 ரூபாய் ஓய்வூதியம் கிடைக்க பாஜக வழிவகை செய்துள்ளது. எனவும் பிரதமர் மோடி பிரச்சார கூட்டத்தில் பேசினார்.
Leave a Reply