சனாதன வழிபாடு மூலமே பாரம்பரிய கலாச்சாரத்தையும், புவியில் உள்ள உயிர்களையும் காக்க முடியும்: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு..!!

வேலூர்: சனாதன தர்மத்தை கடைபிடிப்பதன் மூலமே பாரம்பரிய கலாச்சாரத்தையும், புவியில் உள்ள உயிர்களையும் காக்க முடியும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தில் 5 நாள் நடைபெறும் பாலாறு பெருவிழாவையொட்டி அகில பாரதிய சன்யாசிகள் சங்க மாநாட்டை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார். அதன்பின் நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவில் எந்த மூலையில் இருந்தாலும் நதியை வழிபடுகிறார்கள் என்றும் இதுவே சனாதனம் என்றும் கூறினார்.

நதி வழிபாடு பழங்கால பாரம்பரியமே என்றும் நாடு முழுவதும் நதி வழிபாடு இருப்பதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் அகில பாரதிய சன்யாசிகள் சங்க தலைவர் பேரூர் ஆதினம், சாந்தலிங்க மருதாச்சல அடிகளார், மன்னார்குடி செண்டலங்கார ராமானுஜ ஜீயர் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.