100 கிலோ குட்கா பதுக்கி வைத்திருந்த வியாபாரி கைது..!

கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின்பேரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்டத்திற்கு விரோதமாக விற்பனை செய்பவர் மீது போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள் .இதன் அடிப்படையில் துடியலூர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் ரகசிய தகவலின் அடிப்படையில் துடியலூர் ராஜன் காலனி ,டி. சி .எஸ் நகர் பகுதிகளில் நேற்று அதிரடி சோதனை நடத்தினார்கள் . அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை ( குட்கா ) பதுக்கி வைத்திருந்ததாக சீரநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த வியாபாரி விஷ்ணு குமார் ( வயது 48) கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 100 கிலோ குட்காபறிமுதல் செய்யப்பட்டன. இதை யடுத்து அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.