பயணிகளின் கவனத்திற்கு… மதுரை- கோவை ரயில் போத்தனூர் வரை இயக்கம்..!

கோவை -போத்தனுார் ரயில் பாதையில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் நாளை டிச.16 -ந்தேதி மதுரையில் இருந்து காலை 7:25 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை -கோவை விரைவு ரயில் (16722) போத்தனுார் வரை மட்டும் இயக்கப்படும்.
மறு மார்க்கத்தில் கோவை – மதுரை விரைவு ரயிலும் (16721) நாளை டிச., 16 ல் போத்தனுாரில் இருந்து இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.