வரதட்சணை கேட்டு மனைவிக்கு கொலை மிரட்டல் -கணவர், மாமியார், கணவரின் கள்ளக்காதலி 3 பேர் மீது புகார்..!

கோவை:கோவை சிங்காநல்லூரை சேர்ந்தவர் அஸ்வின் ராம். இவரது மனைவி உமா மகேஸ்வரி (வயது 28) இவர்கள் 2 பேரும் 2011 முதல் 2015 வரை ஒரே கல்லூரியில் படித்தனர்.அப்போது அவர்களுக்கு காதல் ஏற்பட்டது .இந்த நிலையில் உமா மகேஸ்வரி சென்னைக்கு வேலை கிடைத்து சென்று விட்டார்.அஸ்வின் ராமுக்கு வேலை எதுவும் கிடைக்கவில்லை. 17 -5- 2018 அன்று அஸ்வின் ராம் தொழில் தொடங்குவதற்காக மகேஸ்வரிடம் ரூ 1 லட்சத்து 50 ஆயிரம் கடன் வாங்கினார். பிறகு 25-2 – 21 அன்று இருவரும் திருமணம் செய்து கொண்டனர் .அப்போது உமா மகேஸ்வரியின் பெற்றோர் ஒரு பவுன் கை செயின், நெக்லஸ் வரதட்சணையாக கொடுத்தனர் ..இந்த நிலையில் மேலும் நகை பணம் வாங்கி வருமாறு கூறி அஸ்வின் ராம், அவரது தாயார் பானுரேகா  மிரட்டினார்கள். மேலும் அஸ்வின் ராம் ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர் வைத்திருந்தது உமா மகேஸ்வரிக்கு தெரிய வந்தது.இதை உமா மகேஸ்வரி கண்டித்தார். இதனால் அஸ்வின் ராம் தாயார் பானு ரேகா மற்றும் அந்த பெண் 3 பேரும் சேர்ந்து உமா மகேஸ்வரியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்களாம். இது குறித்து கோவை கிழக்கு பகுதி அனைத்து மகளீர் போலீசில் உமாமகேஸ்வரி புகார் செய்தார். போலீசார் கணவர் அஸ்வின் ராம், மாமியார் பானு ரேகா, அவர் கள்ளத்தொடர்பு வைத்திருந்த தீபா ஆகியோர் மீது கொலை மிரட்டல், தாக்குதல், வரதட்சணை கொடுமை ஆகிய 3பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.