சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் காவல்துறையினர் அரசியல் தலையீடு இல்லாமல் தங்கள் பணிகளை சிறப்பாக செய்யலாம் என முதல்வர் ஸ்டாலின் கூறிய நிலையில் அடுத்த வாரமே நீராவி முருகன் என்கவுண்டர் சம்பவம் நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகம் முழுவதும் இன்று பெரும் பேசு பொருளாகியிருக்கிறது 60க்கும் மேற்பட்ட குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட பிரபல ரவுடியான நீராவி முருகனின் என்கவுண்டர் சம்பவம்.
திண்டுக்கல் அருகே நடைபெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பாக நீராவி முருகனை விசாரிக்க சென்ற திண்டுக்கல் தனிப்படை எஸ்.ஐ. இசக்கி ராஜா தலைமையிலான போலீசாரை நீராவி முருகன் தாக்கியதாகவும், தற்காப்புக்காக முருகனை என்கவுண்டர் செய்ததாகவும் கூறுகிறது போலீசார் தரப்பு..
நாங்குநேரி பகுதியில் ரவுடி முருகன் பதுங்கி இருப்பதை அறிந்து போலீசார் அவரை பிடிக்க முயன்றனர். அப்போது ரவுடி முருகன் போலீசாரை அரிவாளால் வெட்டி தப்பமுயன்றதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ரவுடி முருகனை சுற்றி வளைத்த போலீசார் என்கவுன்டர் செய்தது தெரியவந்துள்ளது. காயமடைந்த எச்.ஐ இசக்கிராஜாவிடம் பெறப்பட்ட தகவல் அடிப்படையில் களக்காடு காவல் நிலையத்தில் 3 பிரிவுகளில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான், கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் காவல்துறையினர் அரசியல் தலையீடு இல்லாமல் தங்கள் பணிகளை சிறப்பாக செய்யலாம் என முதல்வர் ஸ்டாலின் கூறிய நிலையில் அடுத்த வாரமே நீராவி முருகன் என்கவுண்டர் சம்பவம் நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. சென்னை தலைமைச் செயலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல்துறை, வனத்துறை அலுவலர்கள் மாநாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கடந்த 10ஆம் தேதி கூடியது.
இந்த கூட்டத்தில் தமிழகம் முழுவதிலில் இருந்து மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல்கண்காணிப்பாளர்கள், டிஜிபி, ஐஜி, டிஐஜி உள்ளிட்ட உயர் காவல்துறை அதிகாரிகளும் பங்கேற்றனர். 3 நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில் அதிகமாக காவல்துறையினர் அழித்த தகவல்களை மிகவும் பொறுமையாக கேட்டு அறிந்த முதல்வர் ஸ்டாலினிடம் தங்கள் தரப்பில் இருக்கும் குறைகளை அதிகாரிகள் கூறியுள்ளனர் குறிப்பாக காவல் நிலையங்களில் குற்றச் சம்பவங்களில் நடவடிக்கை எடுக்கும் போது தரப்படும் அரசியல் அழுத்தம் குறித்து முதல்வர் ஸ்டாலின் போலீசார் கூறியுள்ளனர்.
இதனை கவனத்துடன் பரிசீலித்த முதல்வர் ஸ்டாலின், ரவுடிகள் ஒழிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும், குற்றங்களின் விழுக்காட்டை குறைப்பதற்கு பதில் குற்றமே நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றார். மேலும் குற்றவாளிகளுக்கு தண்டனை மட்டும் பெற்றுத்தரும் துறையாக இல்லாமல், குற்றமே நடக்காமல் காவல்துறை தடுக்க வேண்டும் என பேசினார். மேலும் யாராக இருந்தாலும் காவல்துறையினரின் நடவடிக்கைகள் தலையிடக் கூடாது என்றும், அரசியல் அழுத்தங்கள் இல்லாமல் போலிசார் பணியாற்றலாம் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் தான் கூட்டம் நடந்த அடுத்த வாரமே நீராவி முருகன் என்கவுண்டர் சம்பவம் நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply