மளிகை கடையில் பணம் திருட்டு.

கோவை மே 3

கோவை சாய்பாபா காலனி, பக்கம் உள்ள வெங்கிட்டாபுரம், ரங்கநாதர் வீதியைச் சேர்ந்தவர் சம்பத் ( வயது52 )அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவில்கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்றுகாலையில் கடையில் சிமெண்ட் கூரை உடைக்கப்பட்டு இருந்தது. .உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த ரூ5 ஆயிரத்தை  காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து சம்பத் சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார் .சப் இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.